திண்டுக்கல்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – கல்லூரி தாளாளருக்கு 3 நாள் போலீஸ் காவல்

திண்டுக்கல் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தனம்பட்டி தனியார் நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் போக்சோ வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக திருவண்ணாமலை போளூர் நீதிமன்றத்தில் கடந்த 23ம் தேதி தாளாளார் ஜோதிமுருகன் சரண்டைந்தார்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதி முருகன்  சரண்.! - Seithipunal

இந்நிலையில் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனை காவல்துறையினர் இன்று திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஜோதிமுருகனை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM