0
தேசிய சுகாதார சேவையின் (NHS) நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் மேலாளர்கள் உட்பட சுமார் 18,000 பேரின் பணிநீக்கங்கள் உறுதியாகியுள்ளன.
இந்தப் பணிநீக்கங்களுக்குத் தேவையான £1 பில்லியன் நிதியை திறைசேரி (Treasury) அனுமதித்துள்ளது.
இந்த நடவடிக்கை, இங்கிலாந்து மற்றும் சுகாதாரத் துறையில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேவையற்ற அதிகாரத்துவத்தைக் களைவது மற்றும் நாடாளுமன்றத்தின் முடிவுக்குள் ஆண்டுக்கு £1 பில்லியனை திரட்டுவது இதன் முக்கிய நோக்கம் ஆகும்.
இதன்மூலம், அறுவை சிகிச்சைகளுக்கு அதிக பணத்தை விடுவித்து, நோயாளிகளுக்கான சேவைகளை மேம்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த பணி நீக்கங்களுக்கான ஒருமுறைச் செலவான £1 பில்லியனை செலுத்துவது குறித்து NHS இங்கிலாந்து, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை மற்றும் திறைசேரி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.