• Sun. Jul 20th, 2025

24×7 Live News

Apdin News

நடிகை சுவாசிகா நடிக்கும் ‘ போகி’ பட அப்டேட்ஸ்

Byadmin

Jul 19, 2025


‘லப்பர பந்து’, ‘மாமன்’ ஆகிய வெற்றி படங்களுக்கு பிறகு நடிகை சுவாசிகா முதன்மையான வேடத்தில் நடிக்கும் ‘ போகி ‘ படத்தில் இடம்பெற்ற ‘ கொக்கரக்கோ ‘ எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் எஸ். விஜயசேகரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ போகி’  எனும் திரைப்படத்தில் சுவாசிகா,  பூனம் கவுர், வேல ராமமூர்த்தி,  சங்கிலி முருகன் , மொட்டை ராஜேந்திரன்,  எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர்களுடன் குழந்தை நட்சத்திரங்களான நபி நந்தி – சரத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ராஜா சி. சேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மரியா மனோகர் இசையமைத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தை வி சினிமா குளோபல் நெட்வொர்க் நிறுவனம் தயாரித்திருக்கிறது. பி ஜி பி என்டர்பிரைசஸ் நிறுவனம் வழங்குகிறது.

இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்ற ‘ கொக்கரக்கோ கோழி மணி சொல்லுமே’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் சினேகன் எழுத பின்னணி பாடகிகள் ஹரி பிரியா – சாய்-  சுருதி – ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். கிராமிய பின்னணியில் வாழும் பால்ய பிராயத்து பிள்ளைகளின் இயற்கையோடு இயைந்த வாழ்வியலை விவரிப்பதால் இந்த பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

By admin