• Tue. Jun 9th, 2026

24×7 Live News

Apdin News

நந்தினி ஹரிநாத்: இந்திய ‘ராக்கெட் பெண்’ அணிந்த புடவை அமெரிக்க அருங்காட்சியகத்தில் இடம்பிடித்தது ஏன்?

Byadmin

Jun 9, 2026


நந்தினி ஹரினாத், புடவை, அமெரிக்க அருங்காட்சியகம், இந்திய ராக்கெட் பெண், செவ்வாய் கிரகத்திற்கான புடவை, இந்திய விண்வெளி விஞ்ஞானி

பட மூலாதாரம், Smithsonian’s National Air and Space Museum

படக்குறிப்பு, வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் தேசிய விமான மற்றும் விண்வெளி அருங்காட்சியகத்தில் நந்தினி ஹரிநாத்தின் புடவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது

இந்திய விண்வெளி விஞ்ஞானி நந்தினி ஹரிநாத் தனது வாழ்க்கையிலேயே மிகவும் முக்கியமான நாள் என்று விவரிக்கும் ஒரு நாளில், அடர் சிவப்பு மற்றும் நீல நிறம் கொண்ட பட்டுப்புடவை அணிந்து அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

தற்போது அந்தப் புடவை வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் தேசிய விமான மற்றும் விண்வெளி அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் செவ்வாய் சுற்றுப்பாதை திட்டமான ‘மங்கள்யான்’ திட்டத்தின் செயல்பாட்டு துணை இயக்குநராக இருந்த நந்தினி, இந்த ஆடையை 2013 டிசம்பர் முதல் நாளன்று அணிந்திருந்தார்.

நந்தினிக்கு புடவைகள் மிகவும் பிடித்தமான ஆடை, அதிலும் குறிப்பாக அவரது தந்தை அவருக்குப் பரிசளித்த புடவைகளை பணியிடத்தில் முக்கியமான நாட்களின் போதோ அல்லது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போதோ அணிவது அவருக்கு மிகவும் பிடித்தமானது.

எனவே, இந்த திட்டத்தின் “மிகவும் முக்கியமான ஒரு நாள்” என்று அவர் கருதிய அந்த நாளன்று அவர் இப்படியொரு ஆடையைத் தேர்ந்தெடுத்தது தற்செயலானது அல்ல. அன்றைய தினம், நந்தினி மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள், கட்டுப்பாட்டு அறையில் இருந்து விண்கலத்தை பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து வெளியேற்றி, 300 நாட்கள் நீளும் அதன் செவ்வாய் பயணத்தைத் தொடங்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

By admin