• Wed. Dec 10th, 2025

24×7 Live News

Apdin News

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான 2 புகார் என்ன? பதவி நீக்கம் சாத்தியமா?

Byadmin

Dec 9, 2025


நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

பட மூலாதாரம், hcmadras.tn.gov.in

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்யக் கோரும் தீர்மான நோட்டீஸை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் டிசம்பர் 9 அன்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி எம்.பிக்கள் அளித்துள்ளனர்.

“குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பளிப்பதாக”, தீர்மான நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், நீதித்துறையை மிரட்டும் வகையில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி செயல்படுவதாக பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

நீதிபதிக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி அளித்துள்ள தீர்மான நோட்டீஸால் என்ன நடக்கும்?

என்ன நடந்தது?

மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள பிள்ளையார் மண்டபத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.

By admin