• Wed. Nov 12th, 2025

24×7 Live News

Apdin News

பழனிசாமி இல்லாத அதிமுக சாத்தியமா? | Is an AIADMK possible without EPS

Byadmin

Nov 12, 2025


“பழனிசாமியை வீழ்த்​தாமல் ஓயமாட்​டேன்” என்று அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடி​வி.​தினகரன் சபதம் போடு​கி​றார். “கோட​நாடு கொலை வழக்​கில் முதல் குற்​ற​வாளி பழனிசாமி தான்; அவரிடம் இருப்​பது உண்​மை​யான அதி​முக இல்​லை” என்​கி​றார் புதி​தாய் புறப்​பட்​டிருக்​கும் செங்​கோட்​டையன். “அதி​முக-வை ஒருங்​கிணைப்​பதே எனது வேலை” என தன்​பங்​கிற்கு சபதம் செய்​திருக்​கி​றார் ஓபிஎஸ். இவர்​களுக்கு மத்​தி​யில், “அதி​முக-வை மீண்​டும் ஒன்​று​படுத்​து​வேன்” என்​கி​றார் சசிகலா.

இவர்​களின் பேச்சு அத்​தனை​யுமே அதி​முக என்ற கட்​சியை நோக்​கிய​தாக இல்​லாமல் நேரடி​யாக​வும் மறை​முக​மாக​வும் இபிஎஸ்ஸை நோக்​கிய​தாகவே இருக்​கிறது. இன்​னும் சொல்​லப் போனால், இபிஎஸ் இல்​லாத அதி​முக என்​பது​தான் இவர்​களின் முக்​கிய நோக்​க​மாக இருக்​கிறது. இதற்கு பலமான காரணம் இருக்​கிறது.

சசிகலா, தினகரன், ஓபிஎஸ், செங்​கோட்​டையன் என அனை​வரை​யும் அதி​முக-​விலிருந்து நீக்​கியது இபிஎஸ் தான். அதி​முக-​வின் பிர​தான முகங்​களாக அறியப்​பட்ட தங்​களை ஒரேயடி​யாக கட்​சியை விட்டே தூக்கி எறிந்து தன்னை ஒரு ஆளு​மை​யாக இபிஎஸ் நிரூபித்​திருப்​பதை இவர்​களால் ஏற்​றுக் கொள்ள முடிய​வில்​லை. அதனால் தான், எப்​படி​யா​வது இபிஎஸ்ஸை தலை​மைப் பொறுப்​பிலிருந்து நீக்​கி​விட்டு அந்த இடத்​தில் தங்​களில் ஒரு​வர் வந்​தமர துடிக்​கி​றார்​கள். அதனாலேயே ஆளுக்​கொரு திசை​யில் நின்று இபிஎஸ்ஸை நோக்கி அம்​பு​களை எய்​கி​றார்​கள்.

ஆனால், இவர்​கள் செய்​யும் இந்த சமருக்கு அதி​முக தொண்​டர்​கள் மத்​தி​யில் அவ்​வள​வாய் ஆதர​வில்​லை. அவர்​கள் இபிஎஸ்ஸை தங்​களின் தலை​வ​ராக ஏற்​றுக் கொண்​டு​விட்ட நிலை​யில், ஓபிஎஸ், டிடிவி உள்​ளிட்ட நால்​வரணி​யின் ஒரே நம்​பிக்கை இப்​போது பாஜக-​வாக மட்​டுமே உள்​ளது. இபிஎஸ்ஸை கட்​டுக்​குள் வைப்​ப​தற்​காவது பாஜக தங்​களுக்கு உதவும் என்​கிற நம்​பிக்​கை​யில் இவர்​கள் இருக்​கி​றார்​கள். அதேசம​யம், பாஜக தலை​மை​யின் தயவு யாருக்கு இருக்​கிறதோ அவர்​கள்​தான் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பதவி​யில் நீடிக்க முடி​யும் என்​பதே இப்​போதைய சூழ்​நிலை.

அதி​முக கூட்​ட​ணிக்கு தவெக இசைந்​து​விட்​டால் பாஜக-வை உதறி​விடு​வார் இபிஎஸ் என்று சொல்​லப்​படும் சர்ச்​சைக்கு முற்​றுப்​புள்ளி வைக்க பாஜக தங்​களுக்கு ஆதரவு அளித்து இப்​பிஎஸ்ஸை இக்​கட்​டுக்கு உள்​ளாக்​கும் என்​பது நால்​வரணி​யின் எண்​ணம். ஆனால், தற்​போதைய சூழலில் அமித் ஷா உள்​ளிட்ட பாஜக தலை​வர்​கள் யாரும் இவர்​களை பொருட்​படுத்​து​வ​தில்​லை.

மக்​கள் மத்​தி​யில் செல்​வாக்​கற்ற இவர்​களை விட, தொண்​டர்களை​யும் கட்​சி​யை​யும் தன்​வசப்​படுத்தி வைத்​திருக்​கும் இபிஎஸ்​ஸையே அவர்​கள் முக்​கிய​மாக கருதுகி​றார்​கள். இவருக்​காக ஆக்​டிவ் அரசி​யல்​வா​தி​யான அண்​ணா​மலை​யை​யும் சமரசம் செய்து கொண்​டது அந்த அடிப்​படை​யில் தான். தங்​களிடம் இருக்​கும் 18 சதவீத​மும், அதி​முக-​விடம் இருக்​கும் 21 சதவீத​மும் தங்​களை வெற்​றிக் கோட்​டைக்கு இட்​டுச் செல்​லும் என பெரிதும் நம்​பு​கிறது பாஜக தலை​மை.

அதேசம​யம், எந்​தச் சூழலை​யும் சாதுர்​ய​மாக சமாளிக்​கக் கற்​றுக் கொண்​டு​விட்ட இபிஎஸ், தனக்கு பாஜக பக்​கபல​மாக இருப்​பதை புரிந்து கொண்டு அவர்​களு​ட​னான உறவை அழுத்​த​மாக பேணி வரு​கி​றார். அந்த நம்​பிக்​கை​யில் தான், “எத்​தனையோ துரோகி​கள், எட்​டப்​பன்​கள் நம் இயக்​கத்​தில் இருந்து கொண்டே நம்மை வீழ்த்த முயற்​சித்​தார்​கள். மக்​கள் மற்​றும் தொண்​டர்​கள் துணை​யோடு அத்​தனை துரோகங்​களை​யும் முறியடித்​துள்​ளோம். அதி​முக-வை எந்​தக் கொம்​ப​னாலும் ஆட்​டவோ அசைக்​கவோ முடி​யாது” என்று கர்​ஜிக்​கி​றார் இபிஎஸ்.

ஆக தற்​போதைய சூழ்​நிலை​யில், இபிஎஸ் இல்​லாத அதி​முக என்​ப​தற்கு கொஞ்​சம்​கூட வாய்ப்பே இல்லை என்​பதே நிதர்​சனம் என்​கி​றார்​கள் அரசி​யல் பார்​வை​யாளர்​கள்.



By admin