• Thu. Oct 10th, 2024

24×7 Live News

Apdin News

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பொறியாளருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

Byadmin

Oct 5, 2024



பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆராய்ச்சி பிரிவில் பொறியாளராக நிஷாந்த் அகர்வால் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு படைகள் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் நிஷாந்த் அகர்வால் கைது செய்யப்பட்டார்.

பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் 4 ஆண்டுகள் பணியாற்றிய அவர், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு முக்கியமான தொழில்நுட்ப தகவல்களை வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நிஷாந்த் அகர்வாலுக்கு மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு ஜாமின் வழங்கியது.

இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நாக்பூர் நீதிமன்றம், நிஷாந்த் அகர்வாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் 3,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம்.

By admin