• Thu. Feb 27th, 2025

24×7 Live News

Apdin News

பாலின சமத்துவம்: இந்திய குடும்பங்களில் ஆண், பெண் சமம் இல்லையா? உச்சநீதிமன்றம் கூறியது என்ன?

Byadmin

Feb 27, 2025


பாலின பாடுபாடு, பாலின சமத்துவம்

பட மூலாதாரம், Getty Images

“எனது வீட்டில் இருக்கப் பிடிக்காமல், நான் பல நாட்கள் அழுதிருக்கிறேன். யாரிடம் சொல்வது என்று தெரியாமல், விட்டு விலகிப் போகவும் முடியாமல், செய்வதறியாமல் இருக்கிறேன். ‘ஒரே வீட்டில் வளர்ந்த குழந்தைகளுக்குள் ஏன் இத்தனை பாகுபாடுகள்?’ என்ற கேள்வி என்னுள் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” என்று சமீரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண் கூறினார்.

இளங்கலை படித்து வரும் 21 வயதான சமீராவுக்கு 25 வயதில் சகோதரர் ஒருவர் இருக்கிறார். வீட்டில் அவருக்கும் அவரது அண்ணனுக்கும் பாலின அடிப்படையில் தனித்தனியே விதிகள் இருப்பதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

“எனது சகோதரர் அவர் விரும்பும் நேரத்தில் வெளியே சென்று வரலாம், வீட்டில் அவர் ஒரு வேலையும் செய்யத் தேவையில்லை, அவருக்கு எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை. ஆனால் நான் கல்லூரி முடிந்தவுடன் வீட்டிற்கு வந்துவிட வேண்டும் மற்றும் சமையல், வீட்டைச் சுத்தப்படுத்துவது என்று எல்லாவற்றிலும் உதவி செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது” என்கிறார் சமீரா.

சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா ஒரு வழக்கு விசாரணையின்போது, “பாலியல் சமத்துவம் பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

By admin