• Sun. Jul 20th, 2025

24×7 Live News

Apdin News

பிகார் குற்றங்களின் தலைநகராக மாறுகிறதா ? பாட்னா கொலைகள் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகள்

Byadmin

Jul 19, 2025


பிகார், பாட்னா, குற்றம், சட்டம்-ஒழுங்கு, காவல்துறை

பட மூலாதாரம், Screen Shot

படக்குறிப்பு, வியாழக்கிழமை பாட்னாவில் உள்ள பராஸ் மருத்துவமனையில் சந்தன் மிஸ்ராவைக் கொலை செய்த நபர்களின் சிசிடிவி காட்சிகள்.

பிகாரில் குற்றச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. ஜூலை 4ஆம் தேதி பாட்னா தொழிலதிபர் கோபால் கெம்கா கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாட்னாவில் உள்ள பராஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு கைதி வியாழக்கிழமை (ஜூலை 17) காலை கொலை செய்யப்பட்டார்.

பாட்னா நகரில் மட்டும், ஜூலை 4 முதல் ஜூலை 17 வரை மணல் வியாபாரி ஒருவர், ஒரு பள்ளி நடத்துநர் மற்றும் ஒரு வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், பிகார் ‘குற்றங்களின் தலைநகராக’ மாறி வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பராஸ் மருத்துவமனையில் என்ன நடந்தது?

பிகார், பாட்னா, குற்றம், சட்டம்-ஒழுங்கு, காவல்துறை
படக்குறிப்பு, பாட்னாவின் பராஸ் மருத்துவமனையில், கொலைக்குப் பிறகு குற்றவாளிகள் மிகவும் நிதானமாக தப்பிச் சென்றனர்.

பாட்னாவின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான பராஸ் மருத்துவமனையின் அறை எண் 209இல், வியாழக்கிழமை காலை 7.15 மணியளவில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது.

By admin