‘பிகார் தேர்தலில் களத்தை தவறாக கணித்த காங்கிரஸ் கூட்டணி’- பத்திரிகையாளர் பிரியன்
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையானதை விட அதிகமான இடங்களில், தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. சமீபத்திய நிலவரப்படி, 243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதே நேரத்தில் ஆர்ஜேடி-காங்கிரஸ் ‘மகா’ கூட்டணி 34 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
பிகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், 8.30 மணி வரை மொத்தம் 202 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி இதுவரை 168 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மகா கூட்டணி இதுவரை 26 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
பிகார் தேர்தல் முடிவு குறித்து மூத்த பத்திரிகையாளர் பிரியன் கூறுவது என்ன? இந்த காணொளியில் பார்க்கலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு