• Wed. Nov 12th, 2025

24×7 Live News

Apdin News

புவி வெப்பமாதல் என்பது உண்மை இல்லையா? காலநிலை மாற்றம் பற்றிய 5 கூற்றுகளும் அறிவியல் உண்மையும்

Byadmin

Nov 12, 2025


காலநிலை மாற்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புவி வெப்பமடைதல் இருக்கும் போதிலும், துருக்கியின் இஸ்தான்புல்லில் இதுபோன்ற குளிர்காலங்களும் பனிப்பொழிவு நாட்களும் தொடர்ந்து ஏற்படும்

பிரேசிலில் 30வது ஐநா காலநிலை உச்சிமாநாடு நடைபெறும் நிலையில், காலநிலை மாற்றம் குறித்த தவறான கூற்றுகள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பரவி வருகின்றன. அப்படிப்பட்ட ஐந்து தவறான தகவல்களையும் உண்மை என்ன என்பதையும் இங்கு விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

கூற்று 1: காலநிலை மாற்றம் மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல

மனிதர்களால் காலநிலை மாறவில்லை எனும் வகையில் சமூக ஊடகங்களில் சிலரால் பதிவிடப்படுகின்றன.

பூமியின் வரலாறு முழுவதும் வெப்பமாதல் மற்றும் குளிர்ச்சியடைதலின் சுழற்சிகளைக் கடந்து வந்துள்ளது என்பது உண்மைதான். அது பெரும்பாலும் எரிமலை செயல்பாடு அல்லது சூரிய செயல்பாட்டில் நிகழ்ந்த மாறுபாடுகள் போன்ற இயற்கைக் காரணிகளால் நடந்துள்ளன. ஆனால், இந்த மாற்றங்கள் நீண்டகால அளவில், அதாவது ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான ஆண்டுகளாக நிகழ்ந்தவை.

உலக வானிலை அமைப்பின் தகவல்படி, கடந்த 150 ஆண்டுகளில் பூமி சுமார் 1.3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பமடைந்துள்ளது. இந்த வெப்பமயமாதல் விகிதம் முந்தைய ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் காணப்படவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அமைப்பு (IPCC), இது “சந்தேகத்திற்கு இடமின்றி” மனித நடவடிக்கைகளால், முதன்மையாக நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படுவதாகக் கூறுகிறது.

By admin