• Wed. Jun 10th, 2026

24×7 Live News

Apdin News

பெரம்பூரில் சூட்கேஸில் கிடந்த தலையில்லா சடலம் – மனைவி சிக்கிய பின்னணி

Byadmin

Jun 10, 2026


கொலைக்குற்றத்தில் கைது செய்யப்பட்ட ரஹீமா கதூன்

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, கைது செய்யப்பட்ட ரஹீமா கதூன்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கம் சங்கடம் தரலாம்.

பொதுவாக, கொலை வழக்குகளில் தலையில்லாத சடலம் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த வழக்கு காவல்துறைக்கு பெரும் தலைவலியாக மாறுவது இயல்பு.

அந்தவகையில், பெரம்பூர் ரயில் நிலையத்தின் நான்காம் நடைமேடையில் ஜூன் 5 ஆம் தேதியன்று தலையில்லாத சடலத்துடன் கிடந்த சூட்கேஸ் ஒன்று காவல்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மூன்றே நாட்களில் செங்கல்பட்டு ஏரிக்கு அருகில் சடலத்தின் தலை கண்டறியப்பட்ட நிலையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

மருத்துவர்கள் பயன்படுத்தும் இரு வண்ண பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவை குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை நெருங்க பிரதான காரணங்களாக இருந்ததாக, பிபிசி தமிழிடம் புளியந்தோப்பு காவல் துணை ஆணையர் முத்துக்குமார் தெரிவித்தார்.

By admin