வர்த்தக நிலையங்களில் இலவசமாக பொலித்தீன் பைகள் வழங்கப்படாது என அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று சனிக்கிழமை (01) முதல் அமுல்படுத்தப்படுகிறது.
நவம்பர் 01ஆம் திகதி முதல் வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது இலவசமாக பொலித்தீன் பைகள் வழங்கப்படாது என அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
பொலித்தீன் பயன்பாட்டினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொலித்தீன் பைகளுக்கு கட்டாயம் அறவிடப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபையும் அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
The post பொலித்தீன் பைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று முதல் அமுலில்! appeared first on Vanakkam London.