• Tue. Jun 9th, 2026

24×7 Live News

Apdin News

மனிதன் பூமிக்கு வெளியே விண்வெளியில் கருத்தரித்து குழந்தை பெற முடியுமா?

Byadmin

Jun 9, 2026


விண்வெளி, கரு, பூமி, சூரியன், சூரியக் குடும்பம், குழந்தைப்பேறு, மனிதர்கள், இனப்பெருக்கம்

பட மூலாதாரம், rbkomar / SCIEPRO/SCIENCE PHOTO LIBRARY via Getty Images

    • எழுதியவர், டெய்ஸி ஸ்டீபன்ஸ்
    • பதவி, பிபிசி உலக சேவை
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

விண்வெளி ஆய்வு சமூகம் பெரிய அளவிலான திட்டங்களை முன்வைத்து வருகிறது.

கடந்த மே மாதத்தில், நிலவில் அணுசக்தி மற்றும் சூரிய ஆற்றலால் இயக்கப்படும் நிரந்தர தளத்தை அமைப்பதற்கான தனது 20 பில்லியன் டாலர் திட்ட விவரங்களை நாசா வெளியிட்டது.

2032-ஆம் ஆண்டிற்குள், மனிதர்கள் நிலவில் “ஓரளவு நிரந்தரமான” குடியிருப்புகளில் வாழக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும் என்பதே நாசாவின் நோக்கமாகும்.

செவ்வாய் கிரகத்திற்கு முதன்முறையாக மனிதர்களை அனுப்புவதற்கான திட்டங்களையும் நாசா மேற்கொண்டுள்ளது. அந்தப் பயணம் சுமார் ஏழு முதல் பத்து மாதங்கள் வரை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், பூமிக்கு வெளியே மனிதர்கள் நீண்ட காலம் வசிக்க விரும்பினால், அங்கே இனப்பெருக்கமும் செய்ய வேண்டியிருக்கும். அதாவது, நமக்கு அறிமுகமே இல்லாத சில சூழ்நிலைகளைத் தாங்கும் வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்.

By admin