• Tue. Jun 9th, 2026

24×7 Live News

Apdin News

மம்தா பானர்ஜி கையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் நழுவுகிறதா? விரிவான பகுப்பாய்வு

Byadmin

Jun 9, 2026


 மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ்

பட மூலாதாரம், NurPhoto via Getty Images

படக்குறிப்பு, சட்டப்பேரவை உறுப்பினர்களின் கிளர்ச்சியை சந்தர்ப்பவாதமானது எனக் கூறியுள்ள மம்தா பானர்ஜி, பதிலடி கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, இந்தியச் செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

அரசியல் கட்சிகள் பொதுவாகத் தோல்விகளிலிருந்து மீண்டெழுந்துவிடும்.

ஆனால், திடீரென ஏற்படும் அதிகார இழப்பைச் சமாளிப்பதற்கே பெரும்பாலும் அவை போராடுகின்றன.

கிழக்கு இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சி தற்போது எதிர்கொண்டுள்ள இக்கட்டான நிலை இதுதான்.

ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஒரு மாத காலத்திற்குள்ளாகவே, அந்தக் கட்சி தனது பெரும்பாலான சட்டப்பேரவை உறுப்பினர்களின் கிளர்ச்சியையும், நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே சாத்தியமான பிளவையும், அதன் நிறுவனர் மம்தா பானர்ஜியின் அதிகாரம் குறித்த அதிகரித்து வரும் சந்தேகங்களையும் எதிர்கொண்டு வருகிறது.

மம்தா பானர்ஜி ஒன்றும் சாதாரண பிராந்தியத் தலைவர் அல்ல.

By admin