• Wed. Nov 12th, 2025

24×7 Live News

Apdin News

மாவீரர் நாள் சைக்கிள் கட்சிக்கான ஒன்றல்ல – யாழ் மாநகர சபையில் கடும் வாக்குவாதம்

Byadmin

Nov 12, 2025


நவம்பர் 27 நினைவு நாளை கொண்டாட ஒற்றுமையாக வாருங்கள் இல்லையேல் இரு தரப்பினருக்கும் நல்லூர் பகுதி நிலம் வழங்கப்படாது என முதல்வர் மதிவதனி தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகரின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற நிலையில் நல்லூர் மேற்கு வீதியில் இருக்கும் காணி நிலத்தில் நினைவேந்தல் செய்வதற்கு வழங்குவது தொடர்பில் விவாதிக்கப்பட்டது.

இதன்போது சைக்கிள் கட்சி மற்றும் மான் கட்சி ஆகியனயார்  நினைவேந்தலை குறித்த இடத்தில் நடத்துவது என்று கடும் வாதப் பிரதிவாதம் நடைபெற்றது.

குறிப்பாக சைக்கிள் கட்சிக்கு மட்டும் நினைவேந்தல்கள் செய்யும் உரிமை கிடையாது. அனைத்து தமிழ் தேசித கட்சிகளுக்கும் அதனை நினைவேந்த உரிமை உண்டு.

இதே நேரம் வருடா வருடம் சைக்கிள் கட்சி தரப்பினரே திலிபனின் நினைவு நாள், மாவீரர் நாள் போன்றவற்றை குத்தகைக்கு எடுத்து செய்வது போன்று அடாத்தாக முன்னெடுக்கின்றனர்.

இதை ஏற்க முடியாது. இந்நிலையில் குறித்த விடையத்தில் ஒற்றுமை இன்மையால் தான் இரு பிரிவாக நிகழ்வுகள் இரு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் கீழ்த்தரமான நிகழ்வு நடக்கின்றது.

அதன்படி  நினைவேந்தல் நிகழ்வை நடத்த குறித்த காணியை  மான் கட்சி தரபினர் இம்முறை குத்தகைக்கு கோரியுள்ளனர்.ஆனால் சைக்கிள் தரப்பினர் அதனை ஏற்க இயலாதவர்களாக குழப்பங்களை உருவாக்கி வருகின்றனர்.

எனவேதான் சபை ஏற்கனவே இரு தரப்பினரையும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்து நிகழ்வை நடத்துவது யார் என்று முடிவை  தெரிவிக்குமாறு கோரியிருந்தது.

ஆனால் குறித்த காலப்பகுதியில் இரு தரப்பினரும் எந்தவொரு பதிவையும் எம்முடன் முன்னெடுக்கவில்லை. இதனால் முடிவை சபையே எடுக்க நேரிட்டுள்ளது.

குறித்த விவாதத்தை ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சி புறக்கணித்திருந்த நிலையில் காணியை இரு தரப்புக்கும் வழங்குவதில்லை என்றும் பொது இணக்கபாட்டுடன் தேசிய பரப்பில் இருக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து நடத்த முன்வந்தால் அதற்கு இடம் கொடுக்கப்படும் என்றும் முதல்வரால் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

By admin