திரிணாமுல் காங்கிரஸ தலைவர் சப்யாசாச்சி தத்தா இன்று காலை போலீசாரால் கைது செய்யப்பட்டார். மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகளில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் கைது நடவடிக்கை நடந்தது.
2018-ஆம் ஆண்டில் தன்னிடம் ரூ. 1 கோடிக்கும் அதிகமாக பணம் கேட்டு மிரட்டியதாக ஒரு தொழிலதிபர் அளித்த புகாரின் அடிப்படையில், பிதான்நகர் மாநகராட்சியின் (BMC) முன்னாள் மேயரான சப்யாசாச்சி தத்தா ராய்காச்சியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இருந்தபோதிலும் சப்யாசாச்சி தத்தா தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். நான் ஒரு ரூபாய் பெற்றுக் கொண்டதாக நிரூபித்தால், தூக்கில் தொங்க கூட தயார என்றார்.
அவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது பொதுமக்கள் திருடன் என்று கோஷம் எழுப்பியதுடன் முட்டை மற்றும் மட்டுச்சாணத்தை அவர் மீது வீசி தாக்குதல் நடத்தினர்.
நீதிமன்றம் அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க 8 நாட்கள் அனுமதி வழங்கியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தத்தா பாராசாத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் 2019-ல் பாஜக-வில் இணைந்தார். பின்னர், மீண்டும் மம்தா கட்சிக்கு திரும்பினார்.
உள்ளாட்சி அமைப்புகளில் வேலை வாங்கி தருவதான மோசடி வழக்கில் பிதான்நகர் முன்னாள் எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான சுஜித் போஸ் அமலாக்கத்துறையால் கைதான நிலையில், தற்போது தத்தா கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊழல் மற்றும் ஆணவத்தின் தூண்கள் ஒவ்வொன்றாகக் கைது செய்யப்பட்டு வருகின்றன என்று பிதான்நகர் எ்.எல். ஷரத்வாத் முகர்ஜி தெரிவித்துள்ளார்.