• Tue. Sep 17th, 2024

24×7 Live News

Apdin News

மும்பையில் ஐ.ஏ.எஸ். தம்பதியின் 27 வயது மகள் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

Byadmin

Sep 14, 2024


ஐஏஎஸ் அதிகாரிகளின் மகளான 27 வயது பெண் ஒருவர் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முயன்ற லிபி என்ற பெண்ணை உடனடியாக ஜிடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் தற்கொலைக் கடிதம் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. அதில், தன் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சட்டக்கல்லூரி மாணவியான இவர், தேர்வு குறித்து ஏற்பட்ட பயத்தினால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

லிபியின் தந்தை, விகாஸ் ரஸ்தோகி, மகாராஷ்டிராவின் உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையில் முதன்மைச் செயலாளராக உள்ளார். அவரது தாயார் ராதிகா ரஸ்தோகியும் மாநில அரசில் பணியாற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.

இத்தகு முன்னதாக, மகாராஷ்டிர ஐஏஎஸ் அதிகாரிகளான மிலிந்த் மற்றும் மனிஷா மைஸ்கர் ஆகியோரின் 18 வயது மகன் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin