9
இங்கிலாந்தில் மூன்று பேரின் மரபணுக்களைப் பயன்படுத்தி 08 குழந்தைகள் பிறந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நீரிழிவு நோய் மற்றும் உயிர் ஆபத்தை ஏற்படுத்தக்கூறிய பரப்பரை வழி நோய்களை தடுக்கக்கூடிய வகையில் இந்தக் குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இங்கிலாந்து விஞ்ஞானிகளால் முன்னோடியாகக் கருதப்பட்ட இந்த முறை, ஒரு தாய் மற்றும் தந்தையிடமிருந்து பெறப்பட்ட முட்டை மற்றும் விந்தணுவை மூன்றாவதாக வாடகைத் தாயிடமிருந்து பெறப்பட்ட கர்ப்பப்பையுடன் இணைக்கிறது.
இந்த நுட்பம் இங்கு ஒரு தசாப்த காலமாக சட்டப்பூர்வமாக உள்ளது. ஆனால், குணப்படுத்த முடியாத மைட்டோகாண்ட்ரியல் நோயின்றி பிறக்கும் குழந்தைகளுக்கு இது வழிவகுக்கிறது என்பதற்கான முதல் ஆதாரம் தம்மிடம் உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பரம்பரை நோய்கள் பொதுவாக தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுகின்றன. இது கடுமையான இயலாமையை ஏற்படுத்தும் மற்றும் சில குழந்தைகள் பிறந்த சில நாட்களுக்குள் இறந்துவிடுகின்றன. முந்தைய குழந்தைகள், குடும்ப உறுப்பினர்கள் அல்லது தாய் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் ஆபத்தில் இருப்பதை தம்பதிகள் அறிவார்கள்.
எனினும், மூன்று பேரின் DNAஇல் உருவாக்கப்பட்ட குழந்தைகள் தங்கள் DNAஇன் பெரும்பகுதியை, அவர்களின் மரபணு வரைபடத்தை, அவர்களின் பெற்றோரிடமிருந்து பெறுகிறார்கள். ஆனால், மூன்றாவது பெண்ணிடமிருந்து ஒரு சிறிய அளவை, சுமார் 0.1% பெறுகிறார்கள். இது தலைமுறைகளாக அனுப்பப்படும் ஒரு மாற்றமாகும்.