நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் தயாராகி வரும் ‘திரௌபதி 2 ‘ திரைப்படத்தில் இடம்பெற்ற :எம் கோனே’ எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் மோகன் .ஜி இயக்கத்தில் உருவாகி வரும் ‘திரௌபதி 2’ எனும் திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷனா இந்து சூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி, சிராக் ஜானி, தினேஷ் லம்பா, வை. ஜி. மகேந்திரன், பரணி , தேவயானி சர்மா, சரவண சுப்பையா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பிலிப் ஆர். சுந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். சரித்திர காலகட்டத்தை பின்னணியாக கொண்டு தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை நேதாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சோழா. சக்கரவர்த்தி தயாரித்திருக்கிறார்.
இம்மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த ‘திரௌபதி 2 ‘ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எம் கோனே எம் கோனே உன் தாரா வந்தேனே உன்னோடு இல்லாளாக..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் செல்வமிரா எழுத, பின்னணி பாடகி சின்மயி பாடியிருக்கிறார்.
சரித்திர கால கட்டத்தை நினைவுபடுத்தும் இனிமையான மற்றும் எளிமையான தாள லயத்துடன் மெல்லிசையாக ஒலிக்கும் இந்தப் பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. குறிப்பாக இந்த பாடல் வரிகளில் ஆங்கில கலப்பு இல்லாமல் இருப்பது தமிழ் ரசிகர்களிடத்தில் பாரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.
The post ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் ‘திரௌபதி 2’ படத்தின் பாடல் வெளியீடு appeared first on Vanakkam London.