• Fri. Nov 14th, 2025

24×7 Live News

Apdin News

ரூ.90 கோடியில் தோழி விடுதி, கூர்நோக்கு இல்ல கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் | Chief Minister Stalin lays foundation stone Thozhi Hostel

Byadmin

Nov 14, 2025


சென்னை: தமிழகத்​தில் ரூ.62.51 கோடி​யில் 12 புதிய தோழி விடு​தி​கள், ரூ.27.90 கோடி​யில் கோவை, திருச்​சி​யில் அரசினர் கூர்​நோக்கு இல்ல புதிய கட்​டிடங்​கள் கட்​டும் பணிக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அடிக்​கல் நாட்​டி​னார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தலை​மைச் செயல​கத்​தில் சமூகநலத் துறை சார்​பில் திருப்​பத்​தூர், நாமக்​கல், மயி​லாடு​துறை, விருதுநகர், திண்​டுக்​கல், நீல​கிரி, ராம​நாத​புரம், தூத்​துக்​குடி, புதுக்​கோட்​டை, அரியலூர், திரு​வாரூர், கன்​னி​யாகுமரி ஆகிய இடங்​களில் ரூ.62.51 கோடி மதிப்​பில், 740 பணிபுரி​யும் மகளிர் பயன்​பெறும் வகை​யில் 12 புதிய தோழி விடு​தி​கள் அமைக்​கும் பணி​களுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் காணொலி வாயி​லாக அடிக்​கல் நாட்​டி​னார்.

அதே​போல், கோயம்​புத்​தூர் – ‘பூஞ்​சோலை’ அரசினர் மாதிரி கூர்​நோக்கு இல்​லம் மற்​றும் திருச்​சி​ராப்​பள்ளி அரசினர் கூர்​நோக்கு இல்​லத்​துக்கு ரூ.27.90 கோடி மதிப்​பீட்​டில் கட்​டப்​பட​வுள்ள புதிய கட்​டிடங்​களுக்​கும் அடிக்​கல் நாட்​டி​னார். மேலும், சென்​னை, ராயபுரம் அரசினர் குழந்​தைகள் இல்​லத்​தில் ரூ.7 கோடி செல​வில் கட்​டப்​பட்​டுள்ள புதிய கட்​டிடத்​தைத் திறந்து வைத்​தார்.

சுகா​தா​ரத் துறை

சுகா​தா​ரத் துறை சார்​பில், தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் மூல​மாக 196 உதவி​யாளர் மற்​றும் 18 வட்​டார சுகா​தார புள்​ளி​யிய​லா​ளர் பணி​யிடத்​துக்​கும், மருத்​து​வப் பணி​யாளர் தேர்வு வாரி​யம் மூலம் 19 திறன்​மிகு உதவி​யாளர்​-II (பொருத்​துநர்– II) பணி​யிடங்​களுக்கு தேர்வு செய்​யப்​பட்​ட​வர்​களுக்கு பணி நியமன ஆணை​களை​யும் முதல்​வர் ஸ்டா​லின் வழங்​கி​னார்.

மேலும், புற்​று​நோய் தடுப்பு மற்​றும் பராமரிப்பு திட்​டத்​தின் கீழ், மகளிர் நல்​வாழ்​வுக்​காக ரூ.40 கோடி செல​வில் 38 நடமாடும் மருத்​துவ ஊர்​தி​கள் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளன. டிஜிட்​டல் மேமோகி​ராபி, இசிஜி கரு​வி, செமி-ஆட்டோ அனலைசர் (Semi-autoanalyser) உட்பட பல வசதி​களு​டன் ரூ.1.10 கோடி செல​வில் வடிவ​மைக்​கப்​பட்​டுள்ள நடமாடும் மருத்​துவ ஊர்​தி​யை​யும் பார்​வை​யிட்​டார்.



By admin