0
‘ நான் சிவனாகிறேன்’, ‘டை நோ சர்ஸ்’, ‘ ஃபேமிலி படம் ‘ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கும் நடிகர் உதய் கார்த்திக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படமான ‘சோழநாட்டான்’ காவிரி டெல்டா பகுதியில் நடைபெறும் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியை விவரிக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் ‘பட்டுக்கோட்டை’ ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் உருவாகும் ‘ சோழநாட்டான் ‘ எனும் திரைப்படத்தில் உதய் கார்த்திக், லுத்துஃப், சௌந்தரராஜன் , ஸ்வேதா கர்ணா, நரேன், சீதா, பரணி, விக்னேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
எஸ் ஆர் சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு எஃப் .எஸ் .ஃபைசல் இசையமைக்கிறார். ரேக்ளா பந்தய பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகும் இந்த திரைப்படத்தை செவன் ஹில்ஸ் மூவி மேக்கர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மாரியப்பன் முத்தையா தயாரிக்கிறார்.
இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக விரைவில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.