கண்டியில் உடுதும்பர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலேகெலே பிரதேசத்தில் உள்ள ரொட்டி கடை ஒன்றில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்துக்கு இலக்காகி 7 பேர் படுகாயமடைந்தள்ளதாக உடுதும்பர பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (14) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்தவர்கள் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நான்கு பெண்களும் மூன்று ஆண்களுமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பிரதேசவாசிகளின் உதவியுடன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் 33 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உடுதும்பர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
The post ரொட்டி கடையில் தகராறு | கத்திக்குத்தில் 7 பேர் படுகாயம்! appeared first on Vanakkam London.