• Wed. Nov 12th, 2025

24×7 Live News

Apdin News

வங்கிகளில் வெள்ளியை வைத்தும் கடன் பெறலாம் – ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் என்ன?

Byadmin

Nov 12, 2025


தங்கம், வெள்ளி, கடன், ரிசர்வ் வங்கி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அஜித் கத்வி
    • பதவி, பிபிசி

இந்தியாவில் தங்கம் என்பது நெருக்கடி காலத்தில் ஆபத்பாந்தவனாக உள்ளது. வேறு வழியே இல்லாத சமயங்களில் மக்கள் தங்கத்தை அடமானம் வைத்து கடன் பெறுகின்றனர்.

தங்க நகைக்கடன் என்பது மக்கள் மத்தியில் பரவலாக அறிமுகமாகியுள்ள நிலையில் தற்போது வெள்ளியை அடமானம் வைத்தும் கடன் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, வெள்ளியை வைத்து கடன் பெறுவது தொடர்பான சில விதிகளை மாற்றி ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வெள்ளியை வைத்து கடன் பெறுவது எப்படி? எவ்வளவு கடன் பெற முடியும்? ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் என்ன சொல்கின்றன?

“வெள்ளியை வைத்து கடன் பெறுவது எளிது”

தங்கம், வெள்ளி, கடன், ரிசர்வ் வங்கி

பட மூலாதாரம், Getty Images

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வாரம் வெள்ளியை வைத்து கடன் பெறுவது குறித்த விதிகளை மாற்றி புதிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. ஏப்ரல் 1, 2026 முதல் இந்த விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன.

By admin