இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்திரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார் காங்கிரஸ் கட்சி தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி.
ரேபரேலி தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர விருப்பம் தெரிவிக்க வயநாடு தொகுதி காலியனதாக அறிவிக்கப்பட்டு அதற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரியங்கா காந்தியின் பெயர் அறிவிக்கப்பட்டது. இது நாள் வரையில் காங்கிரஸ் கட்சியின் இதர மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணிகளிலும் பிரச்சாரத்திலும் பங்கேற்ற பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டார்.
இதற்கு முன்பு ராகுல் காந்தி 3.6 லட்சம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றியைப் பெற தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்துள்ளார் பிரியங்கா காந்தி.