வயலில் நூற்றுக்கணக்கான வாத்துகளை விடுவதால் விவசாயிகளுக்கு என்ன லாபம்?
ஆந்திராவிலிருந்து தெலங்கானா வரை 300 கி.மீ தூரம் ஆயிரக்கணக்கான வாத்துகள் மேய்க்கப்படுகின்றன. இவை நெல் அறுவடைக்குப் பின் வயல்களில் மீதமுள்ள நெல்லை சாப்பிடுகின்றன. வயலில் உள்ள பூச்சிகள், களைகளையும் சாப்பிடுகின்றன . கிராமம் கிராமமாக செல்லும் இந்த வாத்துகள் இயற்கை விவசாயத்துக்கு பல ஆண்டுகளாக உதவி வருகின்றன.