• Tue. Jun 9th, 2026

24×7 Live News

Apdin News

விஜய் தொடங்கி வைத்த ‘சிங்கப்பெண்’ படை பற்றி காவலர்கள் கூறுவது என்ன? எதிர்க்கட்சிகள் முன்வைத்த 3 விமர்சனங்கள்

Byadmin

Jun 9, 2026


தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்

பட மூலாதாரம், X/DIPR

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.

தவெக ஆட்சி அமைந்ததும், முதலமைச்சர் விஜய் முதலில் கையெழுத்திட்ட மூன்று கோப்புகளில் ” சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும்” என்ற அறிவிப்பும் அடங்கும்.

இந்த திட்டத்தை முதலமைச்சர் மே 29ம் தேதி தொடங்கி வைப்பதற்கான ஏற்பாடுகள் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், நிகழ்ச்சி தள்ளிப்போனது, இது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்தநிலையில் இன்று இந்த திட்டத்தை தொடங்கி வைத்தபிறகு பேசிய முதலமைச்சர், “இந்த திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்வு தன் மனதிற்கு நெருக்கமான ஒன்று” என்று தெரிவித்தார்

காணொளிக் குறிப்பு,

முதலமைச்சர் பேசியது என்ன?

ஆட்சிக்கு வந்த குறைந்த நாட்களிலேயே இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்திருப்பதாக பேசிய விஜய், ”தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும் ‘அதற்கான முதல் படிதான் இந்த திட்டம்” என்று அவர் கூறினார்.

By admin