மே 22-ஆம் தேதியிட்ட சுற்றறிக்கையின் தொடர்ச்சியாகவும், மதிப்பீடு செய்யப்பட்ட தங்களது விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை பெறுவதற்கான கோரிக்கைகளை சமர்ப்பிக்க மாணவர்களுக்கு போதுமான அவகாசம் அளிக்கும் வகையிலும், கடைசி தேதி மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று வாரியம் தெரிவித்துள்ளது.
“இந்த வசதியின் மற்ற அனைத்து விதிமுறைகளும் நிபந்தனைகளும் மாற்றமின்றி தொடரும்” என்று தெளிவுபடுத்திய அதேவேளையில், நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவை பயன்படுத்திக்கொண்டு அதற்கேற்ப தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு விண்ணப்பதாரர்களுக்கு வாரியம் அறிவுறுத்தியது.
“மறுமதிப்பீட்டுக் கோரிக்கைகளை ஏற்கும் தொடக்கத் தேதி விரைவில் தெரிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது,” என அந்தச் சுற்றறிக்கை தெரிவித்தது.