0
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் நேபாளத்திற்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் சண்முகநாதன் ஷாருஜன் குவித்த அரைச் சதம் இளையோர் இலங்கை அணிக்கு கைகொடுத்தது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 233 ஓட்டங்களைப் பெற்றது.
ஷாருஜன் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 62 ஓட்டங்களைப் பெற்றார்.
3ஆவது விக்கெட்டில் விமத் தின்சராவுடன் 41 ஓட்டங்களைப் பகிர்ந்த ஷாருஜன், 4ஆவது விக்கெட்டில் லக்வின் அபேசிங்கவுடன் மேலும் 79 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
லக்வின் அபேசிங்க 50 ஓட்டங்களைப் பெற்றார்.
ஷாருஜன், லக்வின் ஆகியோரைவிட கவிஜ கமகே 37 ஓட்டங்களையும் துல்னித் சிகேரா 24 ஓட்டங்களையும் பெற்றனர்.
இப் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரஞ்சத்குமார் நியூட்டன் (7 ஆ.இ.), குகதாஸ் மாதுளன் (2) ஆகிய இருவர் இலங்கை அணியில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.