30 பறக்கும் படைகள், 30 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும்: நெல்லை ஆட்சியர் பேட்டி

நெல்லை: நாங்குநேரி தொகுதிக்கு அக்டோபர் 21ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலராக நடேசன் நியமிக்கப்பட்டு உள்ளார். வாக்காளர்களுக்கு உதவ செயலி பயன்படுத்தப்படும் என்று நெல்லை ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாங்குநேரி தொகுதியில் 2.56 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக 3 பேர் நியமிக்கப்படுவர். 30 பறக்கும் படைகள், 30 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும். நெல்லை மாவட்டம் முழுவதும் நடத்தை விதிகள் பொருந்தும். நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச் சாவடிகள் உள்ளன.