• Mon. Sep 9th, 2024

24×7 Live News

Apdin News

80 வயது முதியவர் கொலை; 14 வயது சிறுவன் மீது கொலை குற்றச்சாட்டு!

Byadmin

Sep 6, 2024


இங்கிலாந்து, Leicestershire – Franklin Park இல் கடந்த ஞாயிற்றுக்கிழமை 80 வயது முதியவர் ஒருவர் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மறுநாள் திங்கட்கிழமை உயிரிழந்தார்.

பிரேதப் பரிசோதனையில் முதியவரின் கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் இறந்துவிட்டதாகத் தெரியவந்தது.

முன்னதாக இந்தக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இரு சிறுமிகள் உட்பட 5 சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

Bhim Kohli என்ற மேற்படி முதியவர், தனது நாயுடன் Franklin Park இல் நடைப்பயிற்சி சென்றபோது சிறுவர்களால் அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், 14 வயது சிறுவன் ஒருவன் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சட்ட காரணங்களுக்காக பெயர் குறிப்பிட முடியாத குறித்த சிறுவன், பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

The post 80 வயது முதியவர் கொலை; 14 வயது சிறுவன் மீது கொலை குற்றச்சாட்டு! appeared first on Vanakkam London.

By admin