• Sun. Jul 20th, 2025

24×7 Live News

Apdin News

Coldplay இசைநிகழ்ச்சி வீடியோ சர்ச்சையில் சிக்கிய Astronomer CEO பதவி விலகினார்!

Byadmin

Jul 20, 2025


அண்மையில் நடைபெற்ற Coldplay இசைநிகழ்ச்சி வீடியோ சர்ச்சையின் சிக்கிய Astronomer நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி பைரன் பதவி விலகியுள்ளார்.

அதனை உறுதிப்படுத்தில் Astronomer நிறுவனம் LinkedIn தளத்தில் பதிவிட்டுள்ளது.

மேற்படி இசை நிகழ்ச்சியில் பைரனும் அவரது நிறுவனத்தைச் சேர்ந்த தலைமை மனிதவள அதிகாரி கிறிஸ்டின் கபோட்டும் மிக நெருக்கமாக இருக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவின.

இசை நிகழ்ச்சியின்போது சக ஊழியரை அவர் கட்டியணைத்திருக்கும் காட்சி அரங்கத்தில் இருந்த திரையில் வந்தது.

அதைப் பார்த்தவுடன் இருவரும் உடனே மறைந்துகொண்டனர்.

அமெரிக்காவின் மசச்சூசெட்ஸ் மாநிலத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றது.

அந்த ஊழியர் Astronomer நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி கிறிஸ்டின் கபோட் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக BBC செய்தி நிறுவனம் கூறியது.

சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாக Astronomer அறிக்கை வெளியிட்டது.

நற் பண்புகளையும் கலாசாரத்தையும் முக்கியமாகக் கருதும் நிறுவனத்தில் இத்தகைய சம்பவம் நடந்திருப்பது கவலையளிப்பதாக Astronomer நிறுவனம் LinkedIn பதிவில் குறிப்பிட்டிருந்தது.

பைரன் கட்டாய விடுப்பில் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியான மறுநாளே அவர் பதவி விலகியிருப்பதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது.

By admin