• Sat. Jul 13th, 2024

24×7 Live News

Apdin News

HD 189733 b: அழுகிய முட்டை நாற்றம் வீசும் இந்தப் புறக்கோளில் வேற்றுகிரக உயிர்கள் உள்ளனவா?

Byadmin

Jul 11, 2024


'அழுகிய முட்டை' நாற்றம் வீசும் தொலைதூர கிரகம்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், மேடி மோல்லோய்
  • பதவி, காலநிலை மற்றும் அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூ

மோசமான வானிலைக்குப் பெயர் போன ஒரு தொலைதூரக் கிரகத்தில் அழுகிய முட்டை நாற்றம் வீசுவதாக, புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் தரவுகளைப் பயன்படுத்தி, சுட்டெரிக்கும் வெப்பம், மற்றும் கண்ணாடித் துகள்கள் விழுவதை ஒத்த மழைப்பொழிவு கொண்ட ஒரு கிரகத்தின் வளிமண்டலத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

வியாழன் கிரகத்தில் இருக்கும் ஹைட்ரஜன் சல்ஃபைடு, ஹெச்.டி 189733 பி (HD 189733 b) எனும் இந்த கிரகத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இது துர்நாற்றத்தை வெளியிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது, மனிதர்கள் காற்றை வெளியிடும் போது வெளியாகும் வாயுவாகும்.

'அழுகிய முட்டை' நாற்றம் வீசும் தொலைதூர கிரகம் - வேற்றுகிரக உயிர்கள் குறித்து உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம், Roberto Molar Candanosa/Johns Hopkins Univeristy

படக்குறிப்பு, தொலைதூர கிரகங்களில் உள்ள வேதிப்பொருட்கள் குறித்து ஆராய்வதற்கான வாய்ப்புகளை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி திறந்துள்ளது

முதல்முறை கண்டுபிடிக்கப்படும் விஷயம்

சூரியமண்டலத்திற்கு அப்பால் காணப்படும் புறக்கோள் ஒன்றில் ஹைட்ரஜன் சல்ஃபைடு கண்டறியப்படுவது இதுவே முதன்முறை.

By admin