• Sun. Jul 20th, 2025

24×7 Live News

Apdin News

League One கிண்ணத்தையும் 10 இலட்சம் ரூபாவையும் வெல்லப்போவது யார்?

Byadmin

Jul 20, 2025


இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் லீக் 1 (League One) கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் வெற்றிக் கிண்ணத்தையும் 10,000,000 ரூபா பணப்பரிசையும் குறிவைத்து மாவனெல்லை யுனைட்டட் கழகமும் பேருவளை கிரேட் ஸ்டார் கழகமும் இரண்டாம் கட்ட இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற முதலாம் கட்ட இறுதிப் போட்டியில் கிரேட் ஸ்டார் கழகத்தை 1 – 0 என்ற கோல் வித்தியாசத்தில் மாவனெல்லை யனைட்டட் கழகம் வெற்றி பெற்ற நிலையில் தீர்மானம் மிக்க இரண்டாம் கட்ட இறுதிப் போட்டி இதே மைதானத்தில் சனிக்கிழமை (19) நடைபெறவுள்ளது.

இரண்டாம் கட்ட இறுதிப் போட்டி முடிவில் ஒட்டுமொத்த கோல் நிலையில் முன்னிலையில் இருக்கும் அணி சம்பியனாகும்.

மாவனெல்லை யுனைட்டட் கழகம் சம்பியனாவதற்கு அக் கழகத்திற்கு வெற்றிதொல்வியற்ற முடிவே தேவைப்படுகிறது. ஆனால், கிரேட் ஸ்டார் கழகம் சம்பியனாவதற்கு அக் கழகம் 2 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறவேண்டும்.

ஒருவேளை இந்தப் போட்டியில் கிரேட் ஸ்டார் கழகம் 1 – 0 என வெற்றிபெற்றால் ஒட்டுமொத்த நிலையில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோலைப் பெற்று சமநிலையில் இருக்கும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் சம்பியன் அணியைத் தீர்மானிக்க பெனல்டி முறை அமுல்படுத்தப்படும்.

எனவே இந்த போட்டியில் வெற்றிபெறுவதைக் குறியாகக் கொண்டு இரண்டு அணிகளும் கடுமையாக மோதவிருப்பதால் இந்தப் போட்டி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப் போட்டியைக் கண்டுகளிக்க மாவனெல்லை, பேருவளை ஆகிய பிரதேசங்களிலிருந்து ரசிகர்கள் அரங்கில் நிரம்பி வழிவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

லீக் 1 கால்பந்தாட்டத்தில் சம்பியனாகும் அணிக்கு 10,000,000 ரூபா பணப்பரிசும் இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 500,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்படும்.

லீக் 1 கால்பந்தாட்டத்தில் 16 அணிகள்

லீக் 1 கால்பந்தாட்டப் போட்டியில் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 16 அணிகள் நான்கு குழுக்களில் இரண்டு கட்டங்களைக் கொண்ட முதல் சுற்றில் விளையாடின.

முதல்  சுற்று  நிறைவில் ஒவ்வொரு குழுவிலும் முதலிரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் சுப்பர் 8 சுற்றில் இரண்டு குழுக்களில் இரண்டு கட்டப் போட்டிகளில் விளையாடின.

சுப்பர் லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் இரண்டு கட்ட அரை இறுதிப் போட்டிகளில் குறுக்கு முறையில் மோதின.

இரண்டு கட்டங்களைக் கொண்ட ஒரு அரை இறுதிப் போட்டியில் கெலி ஓயா கால்பந்தாட்ட கழகத்தை முறையே 5 – 1, 3 – 2 என்ற கோல்களைக் கொண்ட 8 – 3 என்ற ஒட்டுமொத்த கோல்கள் வித்தியாசத்தில் மாவனெல்லை யூனைட்டட் கழகம் வெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இரண்டு கட்டங்களைக் கொண்ட மற்றைய அரை இறுதிப் போட்டியில் ஓல்ட் மெஸிடோனியன் கழகத்தை 5 – 1, 3 – 2 என்ற கோல்களைக் கொண்ட 8 – 3 என்ற ஒட்டுமொத்த கோல்கள் வித்தியாசத்தில் கிரே ஸ்டார் கழகம் வெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப் போட்டி அணிகள்

மாவனெல்லை யுனைட்டட் கழகம்: மொஹமத் நப்ரீஸ், மொஹம்மது ரிபாய்ஸ், டிலான் உதயங்க, ஜாவிட் முன்சிப், அஹமத் ரியான், அக்கீல் அஹமத், கசுன் ப்ரதீப், மொஹமத் சக்கீல், அஸ்வர் உமயீர், முஹம்மத் அனாஸ், மொஹமத் சிராஜ், மொஹமத் ரிப்னாஸ், மொஹமத் கய்ப்கான், அஹமத் ஷஹாம், பர்வீஸ் அஹமத், மொஹமத் பத்ஹீன், தியாகமூர்த்தி தயான்சன், மொஹமத்  ஷபான், பதூர்தீன் தஸ்லீம், மொஹமத் ஷிபான், பதூர்தீன் தஸ்லீம், தர்மகுலநாதன் கஜகோபன், ராசிக் ரிஷாத், மொஹமத் ஷபீர், மொஹமத் ரிஸ்வான் அஹமத் நிஜா, ஜோசன் தோஆ அக்கொன்னோர், அக்பெட்டி ஒலுமிடே பிரான்சிஸ்.

கிரே ஸ்டார் கழகம்: மொஹமத் ஹிமாஷ், அஜித் குமார, மொஹமத் ரிம்சான், மொஹமத் பசான், மொஹமத் பய்னாஸ், மொஹமத் ஷிஹாம், மொஹமத் யாசிர், மொஹமத் யூசுப், மொஹமத் மிர்ஷாத், லக்ஷான் தனஞ்சய, மொஹமத் நுஸ்கி, அனில் ஷான்த, மொஹமத்   சஜான், மொஹமத் அப்சால், லக்ஷான் முனசிங்க, தினேஷ் அபேரத்ன, சுபாஷ் மதுஷான், மொஹமத் அப்ராஸ், மொஹமத் ரிஷாத், முஹம்மத் அல் பஹாத், அயேஷ் தினூக்க மெண்டிஸ், அயேஷ் சந்தேஷ், லிப்டன் பெர்னாண்டோ, மொஹமத் அஷ்கர், அன்ரனி ரினோ றிச்சர்ட்சன், அஸீன் மொரேனிக்கேஜி அடேமோலா, ஃபெமி பனுசோ அபயோமி.

By admin