• Sat. Jan 28th, 2023

24×7 Live News

Apdin News

PIB Fact Check: மத்திய அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு போலியான, திசைதிருப்பும் செய்திகளை பரப்பிய தருணங்கள்

Byadmin

Jan 23, 2023


பிஐபி எப்போதெல்லாம் போலியான அல்லது திசைதிருப்பும் செய்திகளை பரப்பியது

பட மூலாதாரம், Getty Images

ஒரு செய்தி போலியா இல்லையா? இதைத் தீர்மானிக்கும் பணியை, இந்திய அரசின் தகவல் வழங்கும் அமைப்பான பிரஸ் இன்ஃபர்மேஷன் ப்யூரோ அதாவது பிஐபியின் உண்மை சரிபார்ப்புக் குழு மேற்கொள்ளும்.

அதாவது PIB ஒரு செய்தியை அல்லது உள்ளடக்கத்தை போலி என்று அழைத்தால், அந்த செய்தி சமூக ஊடகங்கள் உட்பட எல்லா ஆன்லைன் தளங்களிலிருந்தும் அகற்றப்படும்.

தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்ப விதிகள் தொடர்பான புதிய திருத்தப்பட்ட வரைவின் முன்மொழிவை தனது இணையதளத்தில் பகிர்ந்துள்ளது.

இந்த புதிய விதிகள் தற்போதைக்கு முன்மொழிவுகள் மட்டுமே. ஆனால் இது கருத்து சுதந்திரத்தைத் தடுக்கும் முயற்சி என்று எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட அமைப்புகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. அதே நேரத்தில், அரசின் நோக்கம் குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.