• Thu. Jul 16th, 2026

24×7 Live News

Apdin News

ஃபாக்லண்ட் தீவுகள்: இங்கிலாந்தை வீழ்த்திய பிறகு அர்ஜென்டினா ஏந்திய பதாகை சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்?

Byadmin

Jul 16, 2026


ஃபாக்லாண்ட்ஸ் பதாகை விவகாரம் - அர்ஜென்டினா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அத்வைத் ராஜன்
    • பதவி, பிபிசி விளையாட்டு செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஃபாக்லண்ட் தீவுகள் தங்களுக்குச் சொந்தமானது என்ற தங்களது நாட்டின் கோரிக்கைக்கு ஆதரவாக பதாகை ஏந்தி அர்ஜென்டினா வீரர்கள் கொண்டாடியதால், அந்த அணிக்கு எதிராக ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

நடப்பு உலக சாம்பியனான அர்ஜென்டினா, அட்லாண்டாவில் நடைபெற்ற ஆட்டத்தில் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக மீண்டு வந்து இரண்டு கோல்களை அடித்து, இங்கிலாந்து அணியை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்தது. மேலும், ஞாயிற்றுக்கிழமை ஸ்பெயினுக்கு எதிரான இறுதிப் போட்டிக்கான வாய்ப்பையும் உறுதி செய்தது.

போட்டி முடிந்த பிறகு, அர்ஜென்டினா வீரர்கள் “லாஸ் மால்வினாஸ் சோன் அர்ஜென்டினாஸ்” என்று எழுதப்பட்ட பேனரை ஏந்தி தங்களது வெற்றியைக் கொண்டாடினர். இதற்கு “ஃபார்க்லாந்து தீவுகள் அர்ஜென்டினாவுக்குச் சொந்தமானவை” என்று பொருளாகும்.

தென்மேற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள, பிரிட்டனின் நிலப்பரப்பான ஃபாக்லண்ட் தீவுகள், பிரிட்டன் மற்றும் அர்ஜென்டினா இடையே நீண்டகாலமாக இறையாண்மை தொடர்பாக ஒரு விவாதப் பொருளாக இருந்து வருகிறது.

அர்ஜென்டினாவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து 300 மைல் தொலைவில் அமைந்துள்ள இந்தத் தீவு கூட்டங்களுக்காக, இவ்விரு நாடுகளும் 1982 ஏப்ரல் முதல் ஜூன் வரை போரில் ஈடுபட்டன.

By admin