Category: Tamil

தமிழகத்தில் குட்கா விற்பனை ஜோராக நடப்பதாக மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் குட்கா விற்பனை ஜோராக நடப்பதாக மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் குற்றச்சாட்டியுள்ளார். காவல்துறை இருக்கிறதா? அல்லது இப்போதுள்ள டி.ஜி.பி.யும் இதற்கு துணை போகிறாரா? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை சிட்லபாக்கத்தில் மின் கம்பம் சாய்ந்து விபத்து ஏற்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு

சென்னை: சென்னை சிட்லபாக்கத்தில் மின் கம்பம் சாய்ந்து விபத்து ஏற்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். தடய அறிவியல் துறை உதவி இயக்குநர் சோபியா தலைமையில் நடைபெற்று வரும் ஆய்வில் போலீசாரும் பங்கேற்றுள்ளனர். லாரி மோதி மின்கம்பம் சாய்ந்ததே விபத்துக்கு காரணம் என மின்துறை அமைச்சர் தங்கமணி கூறிய நிலையில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் அரையிறுதிக்கு முன்னேறினார்

நியூயார்க்: ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் அரையிறுதிக்கு முன்னேறினார். இவர் ஐஐபிஏ உலக சாம்பியன்ஷிப் பதக்கத்தை வென்ற ஐந்தாவது இந்திய குத்துச்சண்டை வீரர் ஆவார். பிலிப்பைன்ஸ் கார்லோ பாலாமை வீழ்த்தி பங்கால் 52 கிலோ பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறினார்.

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனு நாளைக்கு ஒத்திவைப்பு

டெல்லி: கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை காவலில் உள்ள டி.கே.சிவக்குமார் ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் அழைப்பை ஏற்று இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஆளுநரின் அழைப்பை ஏற்று இன்று மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை சந்திக்கிறார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என அளுநர் மாளிகை மற்றும் திமுக வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்பவனில் இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை ஸ்டாலின் சந்திக்கிறார்.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் 20 பேர் கத்தியுடன் மோதல்

சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் 20 பேர் கத்தியுடன் மோதிக்கொண்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 20 பேரும் ஒருவருக்கு ஒருவர் கத்தியுடன் மோதிக்கொண்டதால் ரயில் நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டது. பின்பு ரயில்வே பாதுகாப்பு படையினரைக் கண்டதும் சுவர் ஏறி குதித்து தப்பியோட முயற்சித்ததாக தகவல்.

மணிக்கு 300 மைல் வேகத்தில் பறக்கும் கார்

ஒரு மணி நேரத்தில் 300 மைல் வேகத்தில் பயணிக்கும் காரில் பயணம் செய்வதற்கான சாத்தியம் உருவாகிக் கொண்டிருக்கிறது. புகாட்டி சிரான் ( bugati chiron ) என்ற கார் அண்மையில் மணிக்கு 305 மைல்  வேகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இது போன்ற காரை உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு தர இருப்பதாக புகாட்டி நிறுவனம் உறுதியளித்துள்ளது. முதன்முதலாக ஆட்டோ உற்பத்தி நிறுவனம் ஒன்று 300 மைல் வேகத்தில் பயணிக்கும் 30  கார்களை மட்டும் உற்பத்தி செய்ய உள்ளது. புகாட்டி […]

டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்தாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள மோடியின் இல்லத்தில் அவரை சந்தித்த மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு குர்தா ஒன்றை பரிசாக வழங்கினார். இதனையடுத்து மேற்கு வங்கத்துக்கான மத்திய நிதி ஒதுக்கீடு, தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவை பற்றி மோடியுடன் ஆலோசிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணுக்கு எட்டாத தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் அஸ்திரா ஏவுகணையின் 3-ம் கட்ட சோதனை வெற்றி

ஓடிசா: கண்ணுக்கு எட்டாத தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் அஸ்திரா ஏவுகணையின் 3-ம் கட்ட சோதனை வெற்றி பெற்றது. ஒடிசா கடற்கரைக்கு அப்பால் 90கி.மீ தொலைவில் இருந்த இலக்கை குறிதவறாமல் அஸ்திரா ஏவுகணை தாக்கியது என டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. விமானப்படையின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து சோதனையை நடத்தியதாக டிஆர்டிஓ தகவல் தெரிவித்துள்ளது.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு – எலக்ட்ரீஷன் கைது

சென்னை கொரட்டூரில் 6-ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக எலக்ட்ரீஷனை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் செய்தனர். சென்னை கொரட்டூர் அருகே உள்ள ஒரு தெருவில் வசித்து வருபவர் சிவராமன். வயது 48. இவர் எலக்ட்ரீஷனாக வேலை செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகே, குடும்பத்துடன் வசித்து வந்த 6-ஆம் வகுப்பு பள்ளி மாணவியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று சிவராமன் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி அவர்களது பெற்றோரிடம் தெரிவித்ததை […]