Category: Tamil

உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை

நாளை இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார். அதேவேளை, கணித பாடத்திற்கு சாதாரண கணிப்பான்களை பயன்படுத்துவதற்கும் மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக அவர் எமது நிலையத்திற்கு தெரிவித்தார். இந்த நிலையில், மாணவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின், பரீட்சை மத்திய நிலையத்தின் மேற்பார்வையாளருக்கு அறிவிக்க முடியும். இல்லையேல், 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அழைக்க […]

நாளை வானில் தோன்றும் நிலவில் ஏற்படவுள்ள மாற்றம்

இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வரும் (நீல நிலா) ´புளூ மூன்´ நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு மீண்டும் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெறும். புளூ மூன் என்று கூறுவதால் நிலவின் நிறத்தில் பெரிய மாறுபாடு எதுவும் இருக்காது. இது முழுக்க முழுக்க பவுர்ணமியின் கால நேரத்தை பொறுத்தது என்று நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரே மாதத்தில் வரும் இரண்டு பவுர்ணமியில் இரண்டாவதாக வரும் பவுர்ணமியே புளூ மூன் ஆகும். மாதத்தில் ஒரு […]

சற்றுமுன் நாட்டில் மேலும் 314 பேருக்கு கொரோனா

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 314 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 105 ஆக காணப்படுகின்றது.

சூம் செயலியில் தாலி கட்டிய வெளிநாட்டு மாப்பிள்ளை

கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்த காரணத்தால் பொது மக்கள் ஒன்று கூடுவதற்கும், பொது நிகழ்வுகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்களும் கொரோனா அச்சத்தில் தமது வாழ்வில் பல முக்கியமான விசேட நிகழ்வுகளை பிற்போட்டுள்ளனர். அந்தவகையில் கொரோனா காரணமாக பல மாதங்களாக பிற்போடப்பட்டுச் சென்ற திருமண நிகழ்வொன்று, இனி வேறு வழியின்றி தமது திருமணத்தை தொலைபேசியிலுள்ள சூம் செயலி மூலம் நடத்திமுடித்துள்ளமை பலருக்கும் வியப்பளித்துள்ளது. குறித்த திருமணம் யாழ்ப்பாணத்திலுள்ள யுவதிக்கும், டென்மார்க்கிலுள்ள புலம்பெயர் தமிழ் இளைஞருக்கும் நேற்று வியாழக்கிழமை […]

மற்றுமொரு பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு

குருநாகல் நகரசபை, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. குருநாகல் நகரசபை ஊழியர்கள் 8 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே, குருநாகல் நகரசபை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வில்லிகொட கிராமமும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடிமின்னல் தாக்குதலில் சிக்கி கணவன் மற்றும் மனைவி உயிரிழப்பு

அம்பாறை, திருக்கோவில் பிரதேச வினாயகபுரத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் மின்னல் தாக்கி பலியாகியுள்ளனர். இத்துயர் சம்பவம் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வினாயகபுரம் தபாலக வீதியைச்சேர்ந்த 46 வயதுடைய லோகநாயகம் யோகேஸ்வரன் மற்றும் அவரது மனைவி காசிப்பிள்ளை ஜெயசுதா(வயது46) ஆகிய தம்பதிகளே இவ்வாறு மின்னல் தாக்கி பலியாகியுள்ளனர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். சடலங்கள் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. குறித்த தம்பதியினர் சாகாமம் கப்பித்தலாவ பகுதியிலுள்ள தமது காணியில் நிலக்கடலை (கச்சான்) செய்கையிலீடுபட்டுக் கொண்டிருந்தபோது […]

10000 ஐ கடந்தது தொற்று எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்றைய தினம் இலங்கையில் மேலும் 314 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 55 பேருக்கும் மற்றும் பேலியகொடை மீன் சந்தை மற்றும் மீன்பிடித் துறைமுக தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 259 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,105 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் […]

பெண் வேட்பாளரை விமர்சித்த விவகாரம்: கமல்நாத் அந்தஸ்து பறிப்பு

Advertisement புதுடில்லி : மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்திற்கு வழங்கப்பட்ட, நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை, தேர்தல் ஆணையம் அதிரடியாக நீக்கியுள்ளது. மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 28 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல், நவ., 3ல் நடக்கவுள்ளது. இதையொட்டி, குவாலியரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், காங்கிரஸ் மூத்த முழு செய்தியை படிக்க Login செய்யவும் Prev « முந்தய Next அடுத்து »

கட்டுநாயக்க – பியகம தொழில் பேட்டையில் 423 பேருக்கு கொரோனா

கட்டுநாயக்க – பியகம தொழில் பேட்டையில் 423 பேருக்கு கொவிட் 19 தொற்று இலங்கை முதலீட்டாளர் சபையினால் நிர்வகிக்கப்படும் தொழில் பேட்டைகளில் இதுவரை 423 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 411 பேர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலும், ஏனைய 12 பேரும் பியகம தொழில் பேட்டையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் சஞ்ஜய மொஹொட்டிடால இதனை தெரிவித்துள்ளார். ´இந்த மாதம் 8 திகதி முதல் 28 ஆம் திகதி […]