Category: Tamil

பொலிசாக நடிக்கும் அருள்நிதி

நடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராகி வரும்’ டைரி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. கலைஞர் மு கருணாநிதி குடும்பத்தின் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த உதயநிதி, அருள்நிதி, தயாநிதி ஆகிய நிதிகளில் உதயநிதி மற்றும் தயாநிதியை காட்டிலும் அருள்நிதியின் நடிப்புத் திறமை அபாரம் என திரையுலகினர் விமர்சிப்பர். ஏனெனில் இவரது கதை தெரிவு இவருடைய திரையுலக பயணத்தில்ஏற்றத்தைத் தரும் வகையில் பொருத்தமாக இருக்கும். திரில்லர் மற்றும் ஹாரர் ஜேனரிலான கதைகளை தெரிவு செய்தாலும், ஒவ்வொன்றிலும் […]

ஆசியாவின் பணக்கார‌ர்கள் பட்டியலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் !

டெல்லி: ஆசியாவின் பணக்கார‌ர்கள் பட்டியலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னர், முதலிடத்தில் இருந்த ஜாங் ஷான்ஷனின் பாட்டில் வாட்டர் நிறுவனம் இந்த வாரம் 20 சதவீதம் இழப்பை சந்தித்ததால் அவரது சொத்து மதிப்பு குறைந்தது.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து.: பலி எண்ணிக்கை 6-ஆக உயர்வு

விருதுநகர்: சிவகாசி அருகே 2 நாட்களுக்கு முன் நடந்த பட்டாசு விபத்தில் பலி எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது. காளையார்குறிச்சியில் நடந்த விபத்தில் படுகாயமடைந்த மாரியம்மாள் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகல் !

அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அகமதாபாத்தில் நடைபெறும் 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து சொந்த காரணங்களுக்காக விலகுவதாக பி.சி.சி.ஐ. ட்விட்டரில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மர்ம பொருள் வெடித்து சாலையில் நடந்து சென்ற பெண் படுகாயம்

புதுச்சேரி: புதுச்சேரி ஓதியம்பட்டு பகுதியில் மர்ம பொருள் வெடித்து சாலையில் நடந்து சென்ற பெண் படுகாயம் அடைந்துள்ளார். சாலையில் கிடந்த மர்ம பொருளை எடுத்தபோது திடிரென வெடித்ததால் ஆனந்தி என்பவர் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த ஆனந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது இறுதி முடிவு எடுக்கக்கூடாது – நீதிமன்றம் உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது எந்த இறுதி முடிவும் எடுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி பொன் கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்கக்கோரி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்திருக்கும் மனுவில், அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்புப் பெற்ற கல்லூரிகளில் மாணவர்களின் அரியர் தேர்வுகளை ரத்து செய்ய எதிர்ப்புத் தெரிவித்ததால், தனக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையாக […]

“கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால்…” – சக்கர நாற்காலி விவகாரம் குறித்து கமல் விளக்கம்

சக்கர நாற்காலி கருத்து குறித்து மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை தாம்பரத்தில் சில நாட்களுக்கு முன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில், ஆரோக்கியமாக இருக்கும் போதே மக்கள் பணியாற்ற விரும்புவதாகவும், சக்கர நாற்காலியில் வந்து யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன் என்றும் கமல்ஹாசன் பேசியிருந்தார். இந்த பேச்சு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் முதுமையை கேலி செய்வதாக இருப்பதாகவும், கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்க வேண்டும் […]

திருவாரூர்: மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று கூரை வீடுகள் முற்றிலும் எரிந்து நாசம்

திருத்துறைப்பூண்டி அருகே மின்கசிவு காரணமாக மூன்று கூரை வீடுகள் தீ பிடித்து எரிந்து சேதம் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆப்பரகுடி கிராமத்தில் வசிக்கும் சுதா என்பவரது வீட்டில் எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து தீ விபத்து குறித்து திருத்துறைப்பூண்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் அருகே இருந்த இரண்டு […]