Category: Tamil
கொழும்பு: புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இலங்கை அரசு விசாரணை குழு அமைத்தது. அதிபர் கோட்டாபய ராஜபக்ச உத்தரவுப்படி ஒரு குழுவும், கடற்தொழில் அமைச்சகத்தின் கீழ் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மீனவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யாமல் இந்தியாவிடம் ஒப்படைக்கவும் இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
டெல்லி: 3 வேளாண் சட்டங்களையும் முற்றாக கைவிடும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என விவசாயிகள் உறுதி அளித்துள்ளனர். வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் பரிந்துரையை ஏற்க முடியாது. டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் திட்டவட்டமாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியில் நெட் பவுலராக இடம்பெற்றவர் தமிழகத்தை சேர்ந்த தங்கராசு நடராஜன். முதலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி, டி20 மற்றும் டெஸ்ட் என இந்த சுற்றுப்பயணத்தில் அனைத்து பார்மெட் கிரிக்கெட்டிலும் விளையாடி அசத்தினார் நடராஜன். அவரது வெற்றியை தங்களது வெற்றியாகவே எண்ணி கொண்டாடி வருகின்றனர் தமிழக மக்கள். இந்நிலையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஆறு மாத காலத்திற்கு பிறகு சொந்த ஊரான சேலம் சின்னப்பம்பட்டிக்கு திரும்பியுள்ள நடராஜனுக்கு அவரது […]