Category: Tamil
மதுரை: மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. மதுரை உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டியில் உள்ள பண்ணை தோட்டத்தில் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சிறுநீரகப் பிரச்னையால் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தா.பாண்டியன் நேற்று காலமானார்.
தேர்தல் அறிவிப்பு காரணமாக கோவையில் நடைபெறவிருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் வேலைக்கு டாடாபாத் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நேர்முகதேர்வு நடைபெறும் என்று கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் இன்று நடைபெற இருந்த நேர்முக தேர்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அப்பள்ளியில் அறிக்கை […]
வாஷிங்டன்: சிரியாவில் உள்ள ஈரான் கிளச்சியாளர்களின் ராணுவத் தளங்கள் மீது நேற்று அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. கடந்த பிப்ரவரி 15ம் தேதி வடக்கு ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது ஈரான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதில், ஒரு அமெரிக்க வீரர் உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், அமெரிக்காவை அச்சுறுத்த நினைக்கும் சீனா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று […]
உலக அளவில் ஐந்து வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் அதன் வளர்ச்சி தடைப்படுகிறது. இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகயுனிசெப்ஆய்வறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘உலக அளவில் குழந்தைகளின் நிலை’ என்ற தலைப்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதில் 2018-ம் ஆண்டில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் 8.8 லட்சம் பேர் இறந்திருப்பதாகவும், இந்தியாதான் குழந்தைகள் இறப்பு விகிதத்தில் முதலிடத்தில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வயதுக்குட்பட்ட குழந்தைகள் 1000 பேரில் 37 பேர் இறப்பது […]