11
அகதிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இங்கிலாந்துக்கு அழைத்து வர அனுமதிக்கும் திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்களை இங்கிலாந்து அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இந்த வாரம் முதல் அமலுக்கு வரும் இந்த நடவடிக்கை, இங்கிலாந்தில் தங்கள் குடும்பத்தினரை அழைத்து வர விரும்பும் பிற புலம்பெயர்ந்தோரைப் போலவே, அகதிகளும் அதே கட்டுப்பாடுகளை எதிர்கொள்வார்கள் என்று உள்துறை செயலாளர் யெவெட் கூப்பர் கூறினார்.
அதாவது, ஒருவர் வருடத்திற்கு குறைந்தது £29,000 சம்பாதிக்க வேண்டும் என்பதுடன், பொருத்தமான தங்குமிடத்தையும் வழங்க வேண்டும்.
அத்துடன், அவர்களின் குடும்ப உறுப்பினர் அடிப்படை ஆங்கில அறிவை நிரூபிக்க வேண்டியிருக்கலாம்.
இதேவேளை, இங்கிலாந்தின் “எல்லைப் பாதுகாப்பு நெருக்கடியின்” அளவைச் சமாளிக்க “குடும்ப மறு இணைவு விதிகளை மாற்றுவது போதாது” என்று கன்சர்வேடிவ் பிரதி உள்துறை செயலாளர் கிறிஸ் பில்ப் கூறியுள்ளார்.