• Thu. Aug 21st, 2025

24×7 Live News

Apdin News

அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

Byadmin

Aug 20, 2025


தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திர நடிகரான அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா மற்றும் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் அசோக் செல்வன் கதையின் நாயகனாகவும், நடிகை நிமிஷா சஜயன் கதையின் நாயகியாகவும் நடிக்கிறார்கள் புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு திபு நினன் தோமஸ் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தை மில்லியன் டொலர் ஸ்டுடியோஸ் மற்றும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஆகிய முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினர் பங்கு பற்றினர். ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அசோக் செல்வன்-  நிமிஷா சஜயன்-  மணிகண்டன் ஆனந்தன் – தயாரிப்பாளர்கள் யுவராஜ் கணேசன் & டொக்டர் ஐசரி கே. கணேஷ் ஆகியோர் கூட்டணி அமைத்திருப்பதால் இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு திரையுலக வணிக வட்டாரத்தில் அதிகரித்திருக்கிறது.

By admin