• Fri. Jan 10th, 2025

24×7 Live News

Apdin News

அச்சுவேலி விபத்தில் புற்றளை இளைஞர் பலி!

Byadmin

Jan 9, 2025


யாழ். அச்சுவேலிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

புலோலி தெற்கு, புற்றளையைச் சேர்ந்த விஜயகுமார் மதிவண்ணன் (வயது – 21) என்ற இளைஞரே உயிரிழந்தார்.

நேற்று புதன்கிழமை இரவு மாடு ஒன்று குறுக்கே சென்றதன் காரணமாக மோட்டார் சைக்கிளும் ஓட்டோவும் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்தச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் உயிரிழந்தார்.

இளைஞரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மரண விசாரணைக்காகவும் பிரேத பரிசோதனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

By admin