• Mon. Oct 13th, 2025

24×7 Live News

Apdin News

அஜய் ரஸ்டோகி: கரூர் விஜய் பரப்புரை வழக்கை கண்காணிக்கப் போகும் ஓய்வு பெற்ற நீதிபதி – இவரின் பின்னணி என்ன?

Byadmin

Oct 13, 2025


ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்டோகி தலைமையில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

பட மூலாதாரம், Bar And Bench

படக்குறிப்பு, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்டோகி தலைமையில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

கரூர் நெரிசல் சம்பவ வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ள இந்திய உச்ச நீதிமன்றம், அந்த விசாரணையைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்டோகி தலைமையில் ஒரு குழுவையும் அமைத்து உத்தரவிட்டுள்ளது. நீதிபதி அஜய் ரஸ்டோகி யார்? அவரது பின்னணி என்ன?

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்துகொண்ட மக்கள் சந்திப்புப் பயணத்தின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை விசாரிக்க தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தது. இதற்குப் பிறகு, ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது.

இதனை எதிர்த்து விஜய் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என கோரப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்டவர் தரப்பு உட்பட மேலும் 4 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவர்கள் இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென கோரியிருந்தனர்.



By admin