• Wed. Jan 15th, 2025

24×7 Live News

Apdin News

அஜித் குமார் துபை கார் ரேஸ் முடிந்த பிறகு தனது ரசிகர்களுக்கு கூறியது என்ன?

Byadmin

Jan 14, 2025


அஜித் குமார், தமிழ் சினிமா, கார் ரேஸ், கோலிவுட்

பட மூலாதாரம், @Akracingoffl

படக்குறிப்பு, வெகு நாட்களாகவே ஊடகங்களிடம் பேசுவதைத் தவிர்த்துவந்தார் நடிகர் அஜித் குமார்

துபையில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தொடரில் (24H series) 911 போர்ஷே கார் பிரிவில் நடிகர் அஜித் குமாரின் அணி 3-வது இடத்தைப் பிடித்தது. இதைத் தொடர்ந்து, நடிகர் அஜித்துக்கும் அவரது அணியினருக்கும் பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

வெகு நாட்களாகவே ஊடகங்களிடம் பேசுவதைத் தவிர்த்துவந்த நடிகர் அஜித் குமார், இந்த கார் பந்தய நிகழ்வின் போது ஊடகங்களின் சில கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார்.

துபையில் அவர் அளித்த ஒரு சமீபத்திய நேர்காணலில், “படங்களை பார்ப்பது கொண்டாடுவது எல்லாம் சரிதான். அஜித் வாழ்க அல்லது விஜய் வாழ்க என்று சொல்கிறீர்கள். நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?” என ரசிகர்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் அஜித் பேசும் அந்தக் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் குறித்து மட்டுமல்லாது, சமூக வலைத்தளங்களில் நிலவும் வெறுப்பு, பாதுகாப்பாக இரு சக்கர வாகனம் ஓட்டுவதன் அவசியம் உள்ளிட்ட பல விஷயங்களை அவர் பேசியுள்ளார்.

By admin