• Tue. Apr 14th, 2026

24×7 Live News

Apdin News

அஜித் குமார் நடித்த ‘அமர்க்களம்’ ரி ரிலீஸ்

Byadmin

Apr 13, 2026


நடிகர் அஜித்குமார் – ஷாலினி ஆகிய இருவரும் முதன் முதலாவதாக இணைந்து நடித்த ‘அமர்க்களம்’ எனும் திரைப்பட எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் மீண்டும் பட மாளிகையில் வெளியாக உள்ளது.

விஜய் நடிப்பில் வெளியான ‘ கில்லி’ திரைப்படம் மறு வெளியீட்டில் வசூலில் சாதனை படைத்ததைத் தொடர்ந்து.. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட முன்னணி நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்கள் மீண்டும் வெளியிடப்படுகிறது. அவை வசூலில் சாதனையும் படைக்கிறது.

இந்நிலையில் இயக்குநர் சரண் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டில் வெளியான ‘அமர்க்களம்’ திரைப்படம் மீண்டும் வெளியிடப்படுகிறது. இந்த படத்தின் மூலம்தான் நடிகர் அஜித்குமார் எக்சன் ஹீரோ அறிமுகமாகி, வெற்றி பெற்று அதனை தற்போது வரை தொடர்கிறார். இந்த திரைப்படத்தில் தான் அஜித் குமாருடன் நடிகை ஷாலினி முதன்முறையாக இணைந்து நடிக்க தொடங்கினார்.

பிறகு இருவரும் வாழ்க்கையிலும் ஒன்றிணைந்தனர். இதனால் அஜித் ரசிகர்களால் உணர்வுபூர்வமாகவும் ரசிக்கப்படும் படைப்பாக அமர்க்களம் இடம்பெற்றது.‌

இதன் காரணமாக தற்போதைய நவீன தொழில்நுட்பத்தில் மீளுருவாக்கம் செய்யப்பட்ட அஜித் குமாரின் ‘அமர்க்களம்’ திரைப்படம் பட மாளிகையில் வெளியாகும் போது ரசிகர்கள் அதனை மீண்டும் பார்த்து கொண்டாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

By admin