• Thu. Jan 29th, 2026

24×7 Live News

Apdin News

அஜித் பவார்: விமான விபத்தின் இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது? நேரில் கண்டவர்கள் கூறியது என்ன?

Byadmin

Jan 28, 2026


அஜித் பவார், டிஜிசிஏ

பட மூலாதாரம், ANI

மகாராஷ்டிராவில் நேரிட்ட விமான விபத்தில் அந்த மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் காலமானார். அவருக்கு வயது 66. விமான விபத்தின் இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது என்பது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விரிவான தகவல்களை வழங்கியுள்ளது.

புனே (கிராமப்புற) எஸ்பி சந்தீப் சிங், ”இன்று (புதன்கிழமை) காலை 8.40 மணிக்கு தரையிறங்குவதற்கு முன்பு விமானம் விபத்துக்குள்ளானது, அதில் ஐந்து பேர் இருந்தனர்.” என்றார்.

பிபிசி மராத்தி செய்தியின்படி, அஜித் பவாருடன் இறந்த மற்ற நபர்களின் பெயர்கள் சுமித் கபூர், ஷாம்பவி பதக், விதிப் ஜாதவ் மற்றும் பிங்கி மாலி.

‘தரையிறங்கும் போது ஏதோ பிரச்னை தெரிந்தது, விமானம் விபத்துக்குள்ளாகலாம் என்று தோன்றியது’ என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

ஷார்ட் வீடியோ

காணொளிக் குறிப்பு, விமானம் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி

மகாராஷ்டிராவில் எதிர்வரும் மாவட்ட ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களுக்காகப் பிரசாரம் செய்ய அஜித் பவார் பாராமதியில் நான்கு பொதுக்கூட்டங்களில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். அதற்காக, அவர் மும்பையிலிருந்து விமானம் மூலம் பாராமதிக்குச் சென்று கொண்டிருந்தார்.

By admin