• Sun. Feb 23rd, 2025

24×7 Live News

Apdin News

அடிக்கடி சூப் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

Byadmin

Feb 23, 2025


உடல் எடையை குறைக்க பல்வேறு டயட் முறைகள் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் தேர்வு செய்வது “சூப் டயட்” தான். பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை, குறுகிய காலத்தில் எடையை குறைக்க இதை பின்பற்றுகிறார்கள்.

7 முதல் 15 நாட்கள் வரை திட உணவுகளை தவிர்த்து, முழுவதுமாக சூப்பினை மட்டும் உட்கொண்டால் உடல் எடை உடனே குறையும்,. எனினும் இதுகுறித்து மருத்துவரிடம் ஆலோசனை செய்து கொள்ளுங்கள்.

1. முட்டைக்கோஸ் சூப்: முட்டைக்கோஸ், தக்காளி, வெங்காயம், கேரட், இறைச்சி போன்றவற்றுடன் கூடிய சூப்பை 7 நாட்கள் தொடர்ந்து உட்கொள்பவர்கள் 4.5 கிலோ வரை எடையை குறைக்கலாம்.

2. சேக்ரட் ஹார்ட் : இறைச்சி, பச்சை பீன்ஸ், செலரி, தக்காளி, வெங்காயம், கேரட் போன்றவற்றை சேர்த்து தயாரிக்கப்படும் சூப். இதில் சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். 7 நாட்களில் 8 கிலோ வரை எடையை குறைக்கலாம்.

3. பீன் சூப்: காளான், பிண்டோ பீன்ஸ், குடைமிளகாய், தக்காளி போன்றவற்றை சேர்த்து தயாரிக்கப்படும் சூப். தினமும் இரண்டு முறை இதை உட்கொள்வதன் மூலம் ஒரே வாரத்தில் 4 முதல் 7 கிலோ வரை எடையை குறைக்கலாம்.

By admin