• Sat. Mar 7th, 2026

24×7 Live News

Apdin News

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: ஜன்னலில் இருந்து விழுந்த நபர் உயிரிழப்பு!

Byadmin

Mar 7, 2026


ஸ்காட்லாந்தின் நார்த் லானார்க்ஷயர் (North Lanarkshire) மதர்வெல் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, ஜன்னலில் இருந்து கீழே விழுந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வியாழக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் ஷீல்ட்ஸ் டிரைவில் (Shields Drive) உள்ள கட்டிடத்தின் 12ஆவது மாடியில் தீ பிடித்ததாக ஸ்காட்டிஷ் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைக்கு (SFRS) தகவல் கிடைத்தது.

இந்த விபத்தை அடுத்து, 09 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் சிறப்பு மீட்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில், நபரொருவர், ஜன்னலில் இருந்து கீழே விழுவதைக் கண்டதாக ஸ்காட்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது.

தற்போது தீ முழுமையாக அணைக்கப்பட்டுவிட்டாலும், எஞ்சிய வெப்பத்தைத் தணிக்க ஒரு தீயணைப்பு வாகனம் இன்னும் அவ்விடத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மற்றும் அப்பகுதி மக்களுக்கும் தீயணைப்பு படை தளபதி ஸ்டீபன் நெஸ்பிட் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தீ விபத்துக்கான காரணம் குறித்து ஸ்காட்லாந்து காவல்துறையும் தீயணைப்புத் துறையும் இணைந்து கூட்டு விசாரணையைத் தொடங்கியுள்ளன.

By admin